மயிலம்: மயிலம் அடுத்த கீழ் எடையாளம் பகவதியம்மன் கோவிலில் தை பூச வழிபாடு நடந்தது.விழாவை முன்னிட்டு காலை 6 மணிக்கு வழிபாடுகள் நடந்தது. பகல் 12 மணிக்கு அர்த்தநாரீஸ்வர், விநாயகர், பகவதியம்மன் சுவாமிகளுக்கு அபிஷேகம் நடந்தது. மூலவர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.பிற்பகல் 2:00 மணிக்கு கோவில் மண்டபத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி முனுசாமி அடிகளார், ஆசிரியர் சச்சிதானந்தம் செய்திருந்தனர்.