Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காஞ்சிபுரம் ராமானுஜர் கோவிலில் ... 85 ஆண்டுகளுக்கு பிறகு நடந்தது.. சிவன்மலையில் தெப்ப உற்சவம்! 85 ஆண்டுகளுக்கு பிறகு நடந்தது.. ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சென்னிமலை முருகன் கோவில் மகாதரிசனம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

23 ஜன
2014
10:01

சென்னிமலை: சென்னிமலை முருகன் கோவில் தைப்பூச விழாவின் முக்கிய நிகழ்ச்சியான, மகாதரிசனத்தில் வெள்ளி மயில் வாகனத்தில், ஸ்வாமி வலம் நடந்தது. இதில் விடிய, விடிய ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். சென்னிமலை முருகன் கோவில் தைப்பூச விழா கடந்த, 9ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. பின் பல்லாக்கு சேவை, மயில் வாகன காட்சி, யானை வாகனகாட்சி, பஞ்சமூர்த்தி புறப்பாடு, திருத்தேரோட்டம், குதிரை வாகன காட்சி, தெப்போற்சவம் என தொடர்ந்து விழா நடந்தது. தைப்பூச விழாவின் மிக முக்கிய நிகழ்வான, மகாதரிசனம் நிகழ்ச்சி, நேற்று முன்தினம் இரவு நடந்தது. முன்னதாக காலை, 10 மணிக்கு சென்னிமலை கைலாசநாதர் கோவிலில் வள்ளி, தெய்வானை சமேத முத்துகுமாரசாமிக்கு சிறப்பு அபிஷேகமும், அதைத்தொடர்ந்து, மலர் அபிஷேகம் நடந்தது. பல ஆயிரம் கிலோ மலர்களால், அபிஷேகம் செய்யப்பட்டது. இரவு, எட்டு மணிக்கு நடராஜ பெருமானும், சுப்பிரமணிய ஸ்வாமியும் வெள்ளி விமானம், வெள்ளி மயில் வாகனத்தில் திருவீதி உலா வந்தனர். இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு விடிய, விடிய ஸ்வாமி தரிசனம் செய்தனர். இரவு, ஒன்பது மணிக்கு நாதஸ்வர, தவிலிசை கச்சேரியுடன், நான்கு ராஜா வீதிகளிலும் ஸ்வாமிகள் வலம் வந்து, அதிகாலையில் கைலாசநாதர் கோவிலுக்குள் சென்றடைந்தது. நேற்று, இரவு மஞ்சள் நீர் அபிஷேகத்துடன், 15 நாள் தேர் திருவிழா நிறைவுக்கு வந்தது. ஏற்பாடுகளை, கோவில் செயல் அலுவலர் பசவராஜன், கோவில் தலைமை எழுத்தர் ராஜீ மற்றும் பணியாளர்கள், அர்ச்சகர்கள் செய்திருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை, சென்னிமலை இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியம் தலைமையில், 100க்கும் அதிகமான போலீஸார் ஈடுபட்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி: திருமலையில் இன்று புதன்கிழமை (நவம்பர் 25) காலை காஞ்சி காமகோடி பீடத்தின் மடாதிபதி ஸ்ரீ ... மேலும்
 
temple news
பாலக்காடு: பாலக்காடு, கண்ணுகோட்டு பகவதி அம்மன் கோவிலில் ஆறாட்டு மகோற்சவ விழா கொடியேற்றம் நடந்தது.கேரள ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கார்த்திகை தீப திருவிழா உச்ச ... மேலும்
 
temple news
உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில், கார்த்திகை பவுர்ணமியை முன்னிட்டு உலகப் புகழ்பெற்ற தேவ் தீபாவளி ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் திருக்கானூர் சௌந்தர்யநாயகி சமேத கரும்பேஸ்வரர் கோவிலில் முதன் முதலாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar