காரைக்கால்: கோட்டுச்சேரியில் உள்ள கோடீஸ்வரமுடையார் கோவிலில் துர்க்கை அம்மன் வார வழிபாட்டு மன்றம் சார்பில், உலக நன்மைக்காக புதன்கிழமை அம்மனுக்கு புஷ்பாபிஷேகம் நடைபெற்றது. இதற்காக வழிபாட்டு மன்றத்தைச் சேர்ந்த பக்தர்கள் பல்வேறு வகையான மலர்களை கோவிலுக்கு ஊர்வலமாகக் கொண்டு சென்று வழிபாடு நடத்தினர்.