உடுமலைப்பேட்டை அருகிலுள்ள தெப்பம்பட்டி பெருமாள் கோயிலில் உள்ள சுவாமி, ஆல்கொண்டமால் எனப்படுகிறார். லிங்க வடிவில் காட்சி தரும் இவர் புற்றின் மத்தியில் சுயம்புவாக தோன்றியவர். ஆலம் (பாற்கடலை கடைந்த போது வெளிப்பட்ட விஷம்) உண்ட சிவனுக்குரிய லிங்க வடிவில் இருப்பதாலும், ஆல மரங்கள் நிறைந்த வனத்தின் மத்தியில் இருப்பதாலும் இவர், ஆல்கொண்டமால் (மால் - திருமால்) என்றழைக்கப்படுகிறார். கால்நடைகள் வளர்ப்போர் இவரிடம் வேண்டிக் கொள்ள, அவை நோயின்றி வாழும், அதிக பால் சுரக்கும் என்பது நம்பிக்கை.