சுசீந்திரம்: இரவிபுதூர் மஹா கணபதி சமேத இடகரை புலமாடசாமி கோயில் மஹா கும்பாபிஷேகம் பிப். 9ஆம் தேதி நடைபெறுகிறது. பிப்.6 ஆம் தேதி காலை 5 மணிக்கு, மகா கணபதி ஹோமம், பூர்ணாஹூதி, தீபாராதனை நடைபெறுகிறது. பிப்.9 ஆம் தேதி காலை 6 மணிக்கு கால யாகசாலை பூஜையும் தொடர்ந்து விமானம், மூலஸ்தானம் மற்றும் வலம்புரி விநாயகர் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.