பதிவு செய்த நாள்
31
ஜன
2014
12:01
திருவள்ளூர்: திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவிலில், தை அமாவாசையை முன்னிட்டு, ஹிருத்தாபநாசினி குளத்தில் நீராடி, தங்களது முன்னோருக்கு பெரும்பாலான பக்தர்கள், திதி கொடுத்தனர்.தை அமாவாசை நன்னாளை நன்றியறிதல் தினமாக கடைபிடிக்கும் வகையில், நேற்று வீரராகவ பெருமாள் கோவில் அருகில் உள்ள, குளக்கரையில் ஏராளமான பக்தர்கள், தங்களது முன்னோருக்கு திதி கொடுத்தனர். வீரராகவ பெருமாள் கோவிலில், நேற்று காலை 5:00 மணி முதல், மதியம் 12:00 மணி வரையும், பின் மதியம் 1:30 மணி முதல், இரவு 8:00 மணி வரை மூலவர் தரிசனம் நடந்தது. மதியம் 3:00 மணிக்கு, உற்சவருக்கு சூர்ணாபிஷேகமும், மாலை 4:00 மணியளவில் வெள்ளி சப்பரத்தில், வேணுகோபாலன் திருக்கோலத்தில் எழுந்தருளி திருவீதி உலா வந்தார்.இரவு 10:00 மணிக்கு யானை வாகனத்தில், உற்சவர் எழுந்தருளினார்.இதை முன்னிட்டு, திருவள்ளூரைச் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்துதிரளான பக்தர்கள் கலந்து கொண்டு, நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் ெசய்தனர்.