மானாமதுரை கேட்ட வரம் முத்துமாரியம்மன் கோயிலில் பங்குனி யாகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16மார் 2026 10:03
மானாமதுரை; மானாமதுரை எஸ்.கரிசல்குளம் கேட்ட வரம் தரும் முத்துமாரியம்மன் கோயிலில் நடைபெற்ற பங்குனி யாகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
மானாமதுரை அருகே எஸ்.கரிசல்குளம் கிராமத்தில் உள்ள கேட்ட வரம் தரும் முத்துமாரியம்மன் கோயிலில் பங்குனி மாதம் தொடர்ந்து 10நாட்கள் பொங்கல் விழா நடைபெறுவது வழக்கமாக உள்ளது.இந்த ஆண்டுக்கான திருவிழா இன்னும் சில வாரங்களில் நடைபெற உள்ள நிலையில் பங்குனி மாதம் பிறந்தது முன்னிட்டு கோயிலில் யாகம் வளர்க்கப்பட்டு அம்மனுக்கு அபிஷேக,ஆராதனை,பூஜைகள் மற்றும் அன்னதானம் நடந்தது.யாகத்தில் எஸ்.கரிசல்குளம்,மானாமதுரை சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை டிரஸ்டிகள் பாண்டி, போதும் பொண்ணு மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.