ஆனைமலை: ஆனைமலை மாசாணியம்மன் கோவில் குண்டம் திருவிழாவையொட்டி, கோவிலை சுற்றியுள்ள பகுதிகளில் குப்பைகளை சுத்தம் செய்யும் பணியில், பேரூராட்சி நிர்வாகம் ஈடுப்பட்டுள்ளது.ஆனைமலை மாசாணியம்மன் கோவில் குண்டம் திருவிழா, நேற்றுமுன்தினம் கொடியேற்றத்துடன் துவங்கியது. இம்மாதம் 17ம் தேதி வரை விழா நடக்கிறது. இதற்கான முன்னேற்பாட்டு வேலைகளில் பேரூராட்சி நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. கோவில் பகுதிகளில் தேங்கியுள்ள குப்பைகளை அகற்றும் பணியில் நேற்று துப்புரவு பணியாளர்கள் ஈடுபட்டனர். மேலும் கோவிலைச்சுற்றியுள்ள கழிவுநீர் கால்வாய்களை தூர்வாரி சுத்தம் செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கோவிலுக்கு வரும் பாதையில் உள்ள நடைபாதை கடைகளையும், கோவிலை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும் வேண்டும் என பக்தர்கள் பேரூராட்சி நிர்வாகத்துக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.