சோழவந்தான் ஜெனகை நாராயணப்பெருமாள் கோயிலில் உழவாரப்பணி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04பிப் 2014 11:02
சோழவந்தான்: சோழவந்தான் ஜெனகை நாராயணப்பெருமாள் கோயிலில், நகர் அரசன்சண்முகனார் அரசு மேல்நிலைப்பள்ளி என்.எஸ்.எஸ்., சார்பில், உழவாரப்பணி நடந்தது. தலைமை ஆசிரியை சாந்தினி தலைமை வகித்தார். என்.எஸ்.எஸ்., திட்ட உதவி அலுவலர்கள் கார்த்திக்குமார், நாராயணன் முன்னிலையில், கோயிலில் அடர்ந்துள்ள முட்புதர்களை அகற்றி சுத்தம் செய்து, சுவர்களுக்கு வர்ணம்தீட்டி, சுகாதாரபணிகளை மாணவர்கள் மேற்கொண்டனர். மாவட்ட திட்ட அதிகாரி மலையாளம், துணைத் தலைமை ஆசிரியர் மனோகரன், கோயில் நிர்வாக அதிகாரி ராஜேந்திரகுமார் பாராட்டினர்.