பதிவு செய்த நாள்
04
பிப்
2014
11:02
சிவகங்கை: சிவகங்கை,பெரியநாயகி அம்பாள், சசிவர்னேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது.விழாவில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இக்கோயிலில், ஜன.31 அன்று காலை 10 மணிக்கு, அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜையுடன் கும்பாபிஷேக பணிகள் துவங்கின. தினமும், யாகசாலை பூஜைகள், பூர்ணாகுதி, தீபாராதனை நடந்தது. மூன்றாம் நாளான நேற்றுமுன்தினம் காலை 6 மணிக்கு, நான்காம் கால யாகசாலை பூஜைகள், கஜபூஜை, கோபூஜையுடன் கும்பாபிஷேகம் துவங்கியது. காலை 8 முதல் 9 மணிக்குள், பெரியநாயகி அம்பாள் சசிவர்னேஸ்வரர் சன்னதி கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றி, கும்பாபிஷேகத்தை நடத்தினர். ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். பரம்பரை அறங்காவலர் மதுராந்தகி நாச்சியார் தலைமை வகித்தார். தேவஸ்தான மேலாளர் இளங்கோவன், கண்காணிப்பாளர் சேவற்கொடியான், சிரஸ்தார் பூசைத்துரை, விழா குழுவினர் பி.எல்.எஸ்., ஆறுமுகம், ராதா, துரைப்பாண்டியன், முத்துகிருஷ்ணன், சிவக்குமார், சரவணகுமார், ராமகிருஷ்ணன், டாக்டர் பகவான் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.