வள்ளிமலை: சுப்பிரமணிய சுவாமி கோயில் பிரமோற்சவ திருத்தேர் திருவிழா செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. பிரம்மோற்சவ திருத்தேர் திருவிழா 10ம்தேதி தொடங்கி தொடர்ந்து 3 நாட்கள் நடைபெற்று வரும் 13 ம் தேதி மாலை 6.15 மணியளவில் 4 ம் நாள் தேர் நிலைக்கு வந்து சேரும். லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள். இந்நிலையில் பிரம்மோற்ச தேர்த் திருவிழாவை முன்னிட்டு மலை மீது உள்ள கோயில் கொடி மரத்தில் கொடியேற்றும் நிகழ்ச்சி நேற்று காலை நடைபெற்றது.