திண்டிவனம் : திண்டிவனம் லக்ஷ்மி நரசிம்மர் பெருமாள் கோவிலில் தாயாருக்கு ஊஞ்சல் உற்சவம் நடந்தது தை மாதம் கடைசி வெள்ளிக்கிழமை விழாவை முன்னிட்டு கனகவல்லி தாயார் மூலவர் மற்றும் உற்சவ மூர்த்திக்கு காலை 10.30 மணிக்கு மகா அபிஷேகம் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது. உற்சவர் ஊஞ்சல் சேவையில் அருள்பாலித்தார். பூஜைகளை சீனிவாசன், ரகு, ஸ்ரீதர் பட்டாச்சாரியர்கள் செய்தனர். திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.