பதிவு செய்த நாள்
11
பிப்
2014
04:02
பலன் எதிர்பாராமல் சேவை செய்யும் மேஷ ராசி அன்பர்களே!
முக்கிய கிரகங்களில் சுக்கிரன் பிப்., 25 வரை தனுசு ராசியில் இருந்து நற்பலனைக் கொடுப்பார். புதன் மார்ச் 10ல் இடம் மாறினாலும், மாதம் முழுவதும் நன்மை தருவார். சூரியன் ,செவ்வாய் ஆகியோராலும் நன்மை உண்டாகும். சனி, கேது,ராகு,குரு ஆகியோரால் நற்பலன் கிடைக்காது. சூரியனால் சிறப்பான பலன்களைக் காண்பீர்கள். சமூகத்தில் மதிப்பு, மரியாதை கூடும். அரசு வகையில் அனுகூலம் ஏற்படும். உடல்நலம் சீராகும். செவ்வாயால் பொருளாதார வளம் அதிகரிக்கும். அபார ஆற்றல் பிறக்கும். ஆடை, ஆபரணம் வாங்குவீர்கள். பிப்., 25 வரை பெண்களால் நன்மை கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைக்கும். சுபநிகழ்ச்சி நடந்தேறும். விருந்து விழா என சென்று வருவீர்கள். தொழில், வியாபாரத்தில் அமோக லாபம் கிடைக்கும். எதிரி தொல்லை மறையும். குறைந்த முதலீட்டில் புதிய தொழில் தொடங்கலாம். உங்கள் வளர்ச்சிக்கு ஒரு பெண் பின்னணியாக இருப்பார். பணியாளர்களுக்கு நன்மை கிடைக்கும். போலீஸ், ராணுவத்தில் பணிபுரிபவர்கள் உயர்ந்த நிலை அடைவர். அதிகாரிகளின் ஆதரவும் சக ஊழியரின் ஒத்துழைப்பும் கிடைக்கும். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். பிப்.,25-ந் தேதிக்கு பிறகு போட்டி அதிகரிக்கும். அரசியல்வாதிகள் சிறப்படைவர். புதிய பதவி கிடைக்க பெறுவர். விவசாயிகளுக்கு வருமானம் அதிகரிக்கும். புதிய சொத்து வாங்க ஏற்ற காலகட்டம். வழக்கு விவகாரத்தில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும்.பெண்கள் குடும்பநலனில் ஆர்வம் காட்டுவர். மாணவர்கள் முன்னேற்றம் காண்பர்.
நல்ல நாள்: பிப்., 18,19, 20, 24, 25, 26, 27, 28, மார்ச் 1,2,5,6,9,10,11
கவன நாள்: பிப்., 21, 22, 23
அதிர்ஷ்ட நிறம்: செந்தூரம், பச்சை எண்: 1,5,9
வழிபாடு: சனிக்கிழமை நரசிம்மர் கோயிலுக்குச் செல்லுங்கள். பிப்.,25க்குபிறகு வெள்ளிக்கிழமை அம்மன் கோயிலுக்கும் சென்று வாருங்கள்.