பதிவு செய்த நாள்
15
ஜன
2014
03:01
குறிக்கோளை நோக்கி முன்னேறி வரும் மீன ராசி அன்பர்களே!
இந்த மாதம் சூரியன் 11ம் இடத்திற்கு வருகிறார். இதனால், மதிப்பு, மரியாதை கூடும். உடல் உபாதை நீங்கி ஆரோக்கியம் மேம்படும். முக்கிய கிரகங்களில் புதன் மட்டும் சாதகமாக இருந்து நற்பலன் அளிக்கிறார். ஜன.16 வரை சுக்கிரனால் நன்மை கிடைக்கும். பணவரவு அதிகரிக்கும். அதன்பின் வக்கிரம் அடைவதால் நன்மை குறையும். குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது. பெண்கள் உறுதுணையாக இருப்பர். ஆடம்பர பொருள் வாங்கலாம். ஜன.30,31ல் உறவினர் வருகையால் நன்மை கிடைக்கும். ஆனால், உறவினர் வகையில் ஜன.14,15,பிப்.10,11,12 ஆகிய நாட்களில் மனக்கசப்பு ஏற்படலாம். அலைச்சல் அதிகரிக்கும். மனைவி வகையில் கருத்துவேறுபாடு உருவாகலாம். விட்டுக் கொடுத்து போகவும். பணியாளர்களுக்கு பணப்புழக்கம் அதிகரிக்கும். பதவி உயர்வுக்கு தடை இருக்காது. பெண்களால் நன்மை உண்டாகும். பொன், பொருள் சேரும். ஜன.28,29ல் நற்பலனை எதிர்பார்க்கலாம். அதிகாரம் கொடி கட்டி பறக்கும். தொழில், வியாபாரத்தை விரிவுபடுத்தலாம். பங்கு தாரர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். புதிய தொழில் தொடங்க ஏற்ற காலம். தொழிலில் லாபம் அதிகரிக்கும். ஜன.19,20ல் எதிரியை வெற்றி கொள்ளும் ஆற்றல் உண்டாகும். பிப்.1,2,5,6,7 தேதிகளில் பண விரயம் ஆகலாம். முயற்சியில் தடை வரலாம். கலைஞர்கள் சீரான வளர்ச்சி காண்பர். ஜன.16க்கு பிறகு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த பலன் கிடைக்காது. மாணவர்கள் பிற்போக்கான நிலையில் இருந்து விடுபடுவர். புதனால் கல்வி வளம் கிடைக்கும். விவசாயப்பணி ஓரளவு சிறக்கும். கால்நடை வகையில் எதிர்பார்த்த லாபத்தை காணமுடியாது. பெண்கள் குடும்பத்தரிடம் நன்மதிப்பை பெறுவர். ஆடை, ஆபரணம் வாங்கலாம். ஜன.21,22, 23ல் விருந்து விழா என சென்று வருவீர்கள். அக்கம்பக்கத்தினர் அனுசரணையுடன் இருப்பர். உடல்நிலை சிறப்படையும். நோய் அனைத்தும் விலகும். பயணத்தின் போது கவனம் தேவை.
நல்ல நாள்: ஜன.19,20,21,22,23,28,29,30,31, பிப்.3,4,8,9
கவன நாள்: ஜன.24,25 சந்திராஷ்டமம்
அதிர்ஷ்ட எண்: 1,7 நிறம்: சிவப்பு, பச்சை
வழிபாடு: வியாழனன்று தட்சணாமூர்த்தி, வெள்ளியன்று லட்”மி வழிபாடு செய்யுங்கள்.
ஜன.16க்குப் பிறகு சுக்கிரனுக்கு அர்ச்சனை செய்யுங்கள்.