ரிஷபம் (கார்த்திகை 2,3,4, ரோகிணி, மிருகசீரிஷம் 1,2) சுப நிகழ்ச்சி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11பிப் 2014 04:02
உற்சாகத்துடன் செயலாற்றி வரும் ரிஷப ராசி அன்பர்களே!
வாழ்வில் நன்மை அதிகரிக்கும் மாதம். குரு,சனி,ராகு, சூரியன், சுக்கிரன் ஆகியோரால் நற்பலன் ஏற்படும். மார்ச் 10 ல் புதன் 10-ம் இடத்திற்கு வருவதால், குடும்பநிலை மேம்படும். சுபநிகழ்ச்சி சிறப்பாக நடந்தேறும். பெண்களின் ஆதரவு கிடைக்கும். பொன், பொருள் சேரும். புது முயற்சியில் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். செவ்வாய் ராசிக்கு 5ல் இருப்பதால் எதிரி தொல்லை உருவாகலாம். உடல் நலம் பாதிக்கப்படலாம். பிள்ளைகள் நலனில் அக்கறை தேவை. சுக்கிரனால் குடும்பத்தில் வசதி, வாய்ப்பு பெருகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைக்கும். விருந்து விழா என சென்று வருவீர்கள். தம்பதியர் இடையே ஒற்றுமை நீடிக்கும். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி காண்பீர்கள். மார்ச் 9க்குப் பிறகு வீண்செலவு குறையும். புதிய தொழில் தொடங்க வாய்ப்புண்டு. எதிரிகள் பயந்தோடுவர். பணியாளர்களுக்கு மார்ச் 10-ந் தேதி வரை பணிச்சுமை இருந்தாலும், அதற்கேற்ப வருமானம் கிடைக்கும். அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும். சக ஊழியர்கள் ஒத்துழைப்புடன் காணப்படுவர். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். எதிர்பார்த்த புகழ்,பாராட்டு கிடைக்கும். விவசாயிகள் காய்கறி, பழ வகைகள் மூலம் நல்ல விளைச்சலும், ஆதாயமும் காண்பர். புதிய சொத்து வாங்க விடாமுயற்சி எடுக்க வேண்டியதிருக்கும்.பெண்கள் குடும்பத்தினர் மத்தியில் செல்வாக்கு பெறுவர். பிப். 13,14, மார்ச் 12,13ல் ஆடை, ஆபரணம் வாங்கி மகிழ்வர். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் காண்பர். மார்ச் 9 க்கு பிறகு முயற்சிக்கு தகுந்த பலன் கிடைக்கும். போட்டியில் ஈடுபட்டு வெற்றி காண்பர்.
நல்ல நாள்: பிப்., 13, 14, 20, 21, 22, 28, மார்ச்1, 2, 3, 4, 7, 8, 12, 13 கவன நாள்: பிப்.,23, 24,25 அதிர்ஷ்ட எண்: 3,7,9 நிறம்: மஞ்சள், செந்தூரம், வெள்ளை வழிபாடு: கேதுவை வழிபடுங்கள். துர்க்கை வழிபாடு நடத்துங்கள். புதனன்று குல தெய்வத்தை வழிபடுங்கள். பசுவுக்கு உணவளியுங்கள். முருகன் கோயிலுக்கு சென்று வந்தால் நன்மை அதிகரிக்கும்.
மேலும்
சித்திரை ராசி பலன் (14.4.2025 முதல் 14.5.2025 வரை) »