மிதுனம் (மிருகசீரிடம் 3,4, திருவாதிரை, புனர்பூசம் 1,2,3) சிக்கனம் தேவை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11பிப் 2014 04:02
மதிநுட்பத்துடன் செயல்பட்டு வரும் மிதுன ராசி அன்பர்களே!
முக்கிய கிரகங்களில் கேது நன்மை அளிக்கிறார். புதன் மார்ச் 10 வரை சாதகமாக நிற்கிறார். சுக்கிரன் பிப்., 24க்குப் பிறகு நற்பலன் தருவார். சூரியன், செவ்வாய், குரு,சனி,ராகு ஆகியோரால் நன்மை ஏற்பட வாய்ப்பில்லை. குருவின் 5,7,9-ம் பார்வையால் நன்மை உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். சுப நிகழ்ச்சி சிறப்பாக நடந்தேறும். வருமானம் கூடும். பெண்களால் மேன்மை உண்டாகும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். தம்பதி இடையே ஒற்றுமை மேம்படும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பர். புதனால், முயற்சிகளில் வெற்றி கிட்டும். ஆடை, ஆபரணம் வாங்குவீர்கள். பிள்ளைகளின் செயல்பாடு பெருமை சேரக்கும். செவ்வாயால் வீண்விரயம் ஏற்பட வாய்ப்புண்டு. சிக்கனத்தை பின்பற்றுவது அவசியம். பிப்., 24 வரை சுக்கிரன் சாதககமற்று இருப்பதால், பெண்களால் சிரமம் நேரலாம். புதன் மார்ச் 10க்குப் பிறகு சாதகமற்ற இடத்திற்கு செல்வதால், வாக்குவாதம் செய்ய நேரிடும். பொறுமை காப்பது நல்லது. சூரியன் 9-ம் இடத்திற்கு செல்வதால் அவப்பெயர் உருவாகலாம் கவனம். தொழில், வியாபாரத்தில் விடாமுயற்சியும், கடின உழைப்பும் தேவைப்படும். பண விஷயத்தில் எச்சரிக்கை தேவை. நண்பர்களால் பிரச்னை உருவாகலாம், கவனம். புதிய தொழில் தொடங்க முதலீடு எதுவும் செய்ய வேண்டாம். யாரையும் நம்பி பணத்தை கொடுத்து விடாதீர்கள். பணியாளர்கள் மேலதிகாரிகளின் ஆதரவைப் பெறுவர். அரசு ஊழியர்கள் சந்தித்த பிரச்னை அனைத்தும் தீரும். கலைஞர்களுக்கு கடின முயற்சியால், புதிய ஒப்பந்தம் கிடைக்கும். பிப்.,24க்குப் பின் புகழ் பாராட்டு கிடைக்கும். அரசியல்வாதிகள் சிறப்பான முன்னேற்றம் காண்பர். எதிர்பார்த்த பதவி கிடைக்கும். விவசாயிகள் உழைப்புக்கேற்ற வருமானத்தை காண்பர். பெண்கள் அக்கம் பக்கத்தினரிடம் பாராட்டு காண்பர். விரும்பியபடி ஆடை, ஆபரணம் வாங்குவர். மாணவர்கள் ஆசிரியரின் ஆலோசனையை ஏற்பது அவசியம். மார்ச் 9க்குப் பிறகு புதன் சாதகமற்ற இடத்தில் இருப்பதால் படிப்பில் ஆர்வம் குறையும் கவனம்.
நல்ல நாள்: பிப்.,15,16,17,22,23,24, மார்ச்3,4,5,6,9, 10,11,14 கவனநாள்: பிப்.25,26,27 சந்திராஷ்டமம். அதிர்ஷ்ட எண்: 6,7 நிறம்: சிவப்பு, பச்சை வழிபாடு: வியாழக்கிழமை தட்சணாமூர்த்தியை வழிபட்டு வாருங்கள். மார்ச் 9 க்கு பிறகு குல தெய்வத்தை வணங்கி, பாசிப்பயறு தானம் செய்யுங்கள். சூரியவழிபாட்டால் நன்மை உண்டாகும்.
மேலும்
சித்திரை ராசி பலன் (14.4.2025 முதல் 14.5.2025 வரை) »