பதிவு செய்த நாள்
11
பிப்
2014
04:02
நினைத்ததை சாதிக்க துடிக்கும் கடக ராசி அன்பர்களே!
புதன் மார்ச் 9 க்கு பிறகு நற்பலன் கொடுப்பார். செவ்வாயால் நன்மை உண்டு. மற்ற கிரகங்கள் சாதகமற்று இருப்பதால் எதையும் சற்று முயற்சி எடுத்தே நிறைவேற்ற வேண்டியிருக்கும். சனியின் 3-ம் இடத்துப்பார்வை சிறப்பாக அமைவதால், நன்மை மேலோங்கும். உங்கள் ஆற்றல் மேம்பட்டு இருக்கும். செவ்வாயின் சஞ்சாரத்தால், பொருளாதார வளம் சிறக்கும். சுக்கிரனால் பிப்., 24 வரை சோர்வு ஏற்படும். பெண்களால் தொல்லை ஏற்படலாம். ஒதுங்கி இருக்கவும். சூரியனால் அரசு வகையில் அனுகூலம் குறையும். வரவு, செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும். உடல் நலம் பாதிக்கப்படலாம். புதனால் குடும்பத்தில் குழப்பம் நிலவும். மனைவி வகையில் பிரிவு ஏற்படலாம். மார்ச் 9க்குப் பிறகு தம்பதி இடையே இருந்த பிணக்கு மறையும். ஒற்றுமை உண்டாகும். உங்கள் முயற்சிகளில் வெற்றி கிட்டும். புத்தாடை, அணிகலன்கள் வாங்கி மகிழ்வர். பிள்ளைகளால் மகிழ்ச்சி, பெருமை சேரும். தொழில், வியாபாரத்தில் லாபம் குறையாது. புதிய தொழில் முயற்சியில் ஈடுபடுவதை தவிர்க்கவும். பணியாளர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். அரசு ஊழியர்கள் வேலையில் கவனம் செலுத்தவும். உங்கள் கோரிக்கை நிறைவேறும். போலீஸ், பாதுகாப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் மேன்மை காண்பர்.மார்ச் 9 க்கு அரசுப்பணியாளர்களுக்கு இருந்து வந்த பிரச்சினை நீங்கும். அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். சுக்கிரன் பிப்ரவரி 24க்கு பிறகு, சுக்கிரன் சாதகமாவதால், கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் பெறுவர். கையில் பணப்புழக்கம் அதிகரிக்கும். அரசியல்வாதிகள் பலனை எதிர்பார்க்காமல், மக்கள் நலனுக்காகப் பாடுபடவேண்டியதிருக்கும். விவசாயிகள் கிழங்கு வகைகள் நிலக்கடலை, காய்கறி, கீரை வகைகள் போன்றவற்றில் அதிக மகசூல் காண்பர். கால்நடை வளர்ப்பில் எதிர்பார்த்த வருமானம் கிடைக்காமல் போகலாம். புதிய சொத்து வாங்க வாய்ப்புண்டு. பெண்கள் ஆன்மிகச் சுற்றுலா சென்று மகிழ்வர். மாணவர்கள் சுமாராகப் படிப்பர்.
நல்ல நாள்: பிப்.,13,14,18,19,24,25,26,27, மார்ச் 5,6,7,8, 12,13
கவன நாள்: பிப்., 28, மார்ச்1,2 சந்திராஷ்டமம்.
அதிர்ஷ்ட எண்: 1,9 நிறம்: சிவப்பு, பச்சை
வழிபாடு: ராகு,கேதுவுக்கு அர்ச்சனை செய்யுங்கள். ரங்கநாதரை வழிபடுங்கள். பசுவுக்கு பசுந்தழை போடுங்கள்.