பதிவு செய்த நாள்
11
பிப்
2014
04:02
மன உறுதியும், செயல்திறமும் மிக்க சிம்மராசி அன்பர்களே!
கிரகங்களில் குரு,சனி,ராகு நற்பலனை வழங்க காத்திருக்கின்றனர். சூரியன், செவ்வாய், ராகு நன்மை தர இயலாதவராக உள்ளனர். சுக்கிரன் பிப்., 9 வரையிலும், புதன் மார்ச் 24 வரையிலும் நற்பலன் வழங்குவர். சனியால் பொருளாதார வளம், தொழில் வளர்ச்சி உண்டாகும். புதனால் எடுத்த காரியம் வெற்றி அடையும். சுப நிகழ்ச்சி சிறப்பாக நடக்கும். செல்வாக்கு அதிகரிக்கும். பெரியோர் ஆதரவும், ஆலோசனையும் கிடைக்கும். நண்பர்கள் உதவி செய்வர். லாபம் அதிகரிக்கும். சுக்கிரன் பிப்., 9 க்கு பிறகு ராசிக்கு 6 ல் இருப்பதால் முயற்சியில் தடையும், மனதில் சோர்வும் ஏற்படும். சூரியனால் அலைச்சல் அதிகரிக்கும். அவப்பெயர் வரலாம். விவாதங்களில் ஈடுபட வேண்டாம். குடும்பத்தில் பெரியவர்களின் உதவி கிடைக்கும். மார்ச் 24 க்கு பிறகு புதனால், குடும்ப பிரச்னை தலைதூக்கலாம். தம்பதியர் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து போகவும். தொழில், வியாபாரத்தில் விழிப்புடன் செயல்படுவது நல்லது. செவ்வாய் 2 ல் இருப்பதால் களவு ஏற்பட வாய்ப்புண்டு. பகைவர் தொல்லை உருவாகும். அரசு வகையில் ஆதாயம் இல்லை. வரவு, செலவுக் கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும்.பணியாளர்கள் நல்ல வளர்ச்சி காண்பர். சிலருக்கு பதவி உயர்வும் கிடைக்கும். பணிஇடத்தில் செல்வாக்கும் அதிகரிக்கும். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். பிப்., 24க்கு பிறகு, புகழ் பாராட்டு கிடைப்பதில் தாமதம் ஆகலாம். அரசியல்வாதிகள் உழைப்புக்கு ஏற்ப பலன் பெறுவர். விவசாயிகள் மிதமான லாபம் காண்பர். வழக்கு விவகாரங்களில் மெத்தனமாக இருப்பது கூடாது. பெண்கள் விழிப்புடன் செயல்படுவது அவசியம். பிப்., 20,21ல் பிறந்த வீட்டில் இருந்து சீதனமாக பொருள் வந்து சேரும். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் காண்பர்.
நல்ல நாள்: பிப்.,15,16,17,20, 21, 26,27,28, மார்ச்1,7,8,9, 10,11,14
கவன நாள்: மார்ச் 2,3,4
அதிர்ஷ்ட எண்: 4,6 நிறம்: மஞ்சள், சிவப்பு, பச்சை
வழிபாடு: செவ்வாய்க்கிழமை முருகன், மாரியம்மனைத் தரிசனம் செய்யுங்கள். மார்ச் 9க்கு பிறகு குலதெய்வத்தை வணங்குவது நல்லது. தினமும் காலையில் சூரியனை தரிசனம் செய்யுங்கள்.