அலங்காநல்லுார் : அலங்காநல்லுார் தெப்பக்குளம் பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. கருப்பையா எம்.எல்.ஏ., முன்னாள் பேரூராட்சி தலைவர் ரகுபதி, துணைத்தலை வர் ரேணுகாஈஸ்வரி உட்பட அறக்கட்டளை நிர்வாகிகள், பிரமுகர்கள் பங்கேற்றனர். அன்னதானமும், திருவிளக்கு பூஜையும் நடந்தது. நேற்றிரவு சுவாமி நகர் வலம் வந்து அருள்பாலித்தார். ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் செய்துஇருந்தனர்.