காரமடை: கோவை மாவட்டம் காரமடை அரங்கநாதர் கோவிலில் மாசிமாத திருவிழா நடைபெற்று வருகிறது. திருவிழாவின் ஒரு பகுதியாக அரங்கநாதரின் திருக்கல்யாண உற்சவ விழா நடைபெற்றது. இதனைமுன்னிட்டு பக்தர்களுக்கு திருமாங்கலய கயிறு பிரசாதமாக வழங்கப்பட்டது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.