நீதிதேவதையான கண்ணகிக்கு, கேரளாவில், கொடுநல்லூர், ஆற்றுக்கால் ஆகிய இடங்களில் கோயில் உள்ளது. மதுரையில் இருந்து புறப்பட்ட கண்ணகி, கோபம் தணிந்த இடம் ஆற்றுக்கால். இங்கு ஓடும் கிள்ளிஆற்றில் தன் பாதம் இரண்டையும் நனைத்த பின்னரே கண்ணகியின் மனம் அமைதி அடைந்தது. அப்போது பசியை உணர்ந்த அவள், அந்த இடத்தில் ஏழைப் பண்டாரம் ஒருவர் சமைப்பதைக் கண்டாள். அவர், தன்னிடம் பொங்கல் சோறு இருப்பதைத் தெரிவிக்க, அன்புடன் ஏற்று, அவரை ஆசிர்வதித்தாள். அவளுக்கு அங்கு கோயில் எழுப்பப்பட்டு பகவதி என்னும் திருநாமம் பெற்றாள். ஆற்றுக்கால் பகவதி கோயில் பெண்களின் சபரிமலை எனப் போற்றப் படுகிறது. இங்கு பொங்காலை விழா விசேஷம். 2009ல் 25 லட்சம் பெண்கள் ஒரே சமயத்தில் பொங்கல் வைத்து கின்னஸ் சாதனை படைத்தனர். வரும் பிப்.16ல் விழா நடக்கிறது. இதில் கலந்து கொள்ள இயலாதவர்கள், சென்னை நூம்பல் ஐ.சி.எல். குடியிருப்பில், அதே நாளில் நடக்கும் பொங்காலை விழாவில் பங்கேற்கலாம். போன்: 94446 42407, 94452 30409.