பதிவு செய்த நாள்
17
பிப்
2014
11:02
பள்ளிப்பட்டு : பெருமாநல்லுார் காமாட்சியம்மன் உடனுறை புவனேஸ்வரர் கோவிலில், இன்று கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. பள்ளிப்பட்டு அடுத்த, பெருமாநல்லுார் கிராம கொற்றலை ஆற்றங்கரை கிழக்குப் பகுதியில், சோழர்களின் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட, காமாட்சியம்மன் உடனுறை புவனேஸ்ரர் கோவில் உள்ளது. பல ஆண்டுகளாக புதர் மண்டிக்கிடந்த இந்த கோவிலை சீரமைக்கும் பணி, கடந்த ஆண்டு துவங்கியது. சீரமைப்புப் பணியின் போது, மண்ணுக்குள் புதைந்து கிடந்த, மரகத லிங்கம் கண்டெடுக்கப்பட்டது. இந்த மரகத லிங்கம், தற்போது நிர்மாணம் செய்யப்பட்டது. இந்நிலையில், கோவிலின் கும்பாபிஷேகம், இன்று காலை, 9:30 மணிக்கு நடைபெற உள்ளது. இரவு, பரதநாட்டிய கலை நிகழ்ச்சி நடைபெறுகிறது. தொடர்ந்து உற்சவர், வாண வேடிக்கையுடன் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.