பதிவு செய்த நாள்
17
பிப்
2014
12:02
ஈரோடு: ஈரோடு சூரம்பட்டி ஸ்ரீமாகாளியம்மன் கோவில் குண்டம் மற்றும் பொங்கல் விழா வரும், 25ம் தேதி இரவு, எட்டு மணிக்கு பூச்சாட்டுதலுடன் துவங்குகிறது.மார்ச், இரண்டாம் தேதி மாலை, 4 மணிக்கு அம்மன் முத்துபல்லக்கும், நான்காம் தேதி, மாலை, 3.30 மணிக்கு காவிரியில் தீர்த்தம் கொண்டு வருதலும், இரவு, 10 மணிக்கு குண்டம் பற்றவைத்தலும் நடக்கிறது. வரும், ஐந்தாம் தேதி அதிகாலை குண்டம் இறங்குதல், காலை, 11 மணியளவில், பொங்கல் வைத்தல் நிகழ்ச்சியும் நடக்கிறது.வரும், ஆறாம் தேதி மாலை, ஆறு மணிக்கு மறுபூஜையுடன் நிகழ்ச்சிகள் நிறைவு பெறுகிறது.