பதிவு செய்த நாள்
17
பிப்
2014
12:02
சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரி மாரியம்மன் கோவிலில், மார்ச், 18ம் தேதி, அதிகாலை, பக்தர்கள் தீ மிதிக்கும் குண்டம் விழா நடக்க உள்ளது.பண்ணாரி மாரியம்மன் கோவில், தமிழகம் மட்டுமின்றி, கர்நாடக மாநில பக்தர்களிடையேயும் பிரசித்தி பெற்றதாகும். ஆண்டு தோறும், பங்குனியில், இக்கோவிலின் முக்கிய விழாவான குண்டம் விழா நடப்பது வழக்கம். இந்த விழாவில், இரு மாநிலங்களை சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள், தீ மிதித்து, தங்கள் நேர்த்திகடனை நிறைவு செய்வர்.இந்தாண்டின் குண்டம் விழா, மார்ச், 3ம் தேதி (மாசி, 19ம் தேதி) இரவு பூச்சாட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்குகிறது. மார்ச், 11ம் தேதி இரவு கம்பம் சாட்டும் நிகழ்ச்சியும், மார்ச், 18ம், செவ்வாய்கிழமை அதிகாலை, நான்கு மணிக்கு பக்தர்களின் தீ மிதிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. மார்ச், 19ம் தேதி இரவு புஷ்பரதம், 20ம் தேதி மஞ்சள் நீராட்டு, 21ம் தேதி விளக்கு பூஜையும், மார்ச் 24ம் தேதி மறுபூஜையுடன், இந்த ஆண்டு குண்டம் விழா நிறைவடைகிறது. ஏற்பாடுகளை, கோவை அறநிலைத்துறை இணை இயக்குனர் நடராஜன் தலைமையில், அதிகாரிகள் செய்து வருகின்றனர்.