பிரம்மத்திற்கும், இந்த உலகத்திற்கும் உள்ள தொடர்பு என்ன?
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17பிப் 2014 03:02
ஒரு மாலை, நூலால் கட்டப்பட்டிருக்கிறது. ஆனால் மாலைதான் நம் கண்ணுக்குத் தெரிகிறதே தவிர, நூல் கண்ணுக்குத் தெரிவதில்லை. அதுபோல் உலகிலுள்ள அனைத்தும், அங்கிங்கெனாதபடி எங்கும் வியாபித்திருக்கும் பிரம்மத்தையே மூலப்பொருளாகக் கொண்டுள்ளன. ஒரு மரத்தில் உள்ள இலை, பூ, காய், பழம், கிளை ஆகியவற்றில் வேறுபாடுகள் இருக்கின்றன. எனினும் அவற்றை ஆராய்ந்து பார்த்தால் அவற்றின் மூலப்பொருள் ஒன்றே. இப்படி பலவாகக் காணப்படும் அகில உலகங்களுக்கும், அண்ட சராசரங்களுக்கும் மூலப்பொருள் பிரம்மமே. ஞான முதிர்ச்சியில் பிரம்மம், எல்லோரிடமும் எல்லாவற்றிலும் இருப்பதை பிரம்மஞானி உணர்கிறார். பார்ப்பதெல்லாம், கேட்பதெல்லாம் பிரம்மமேயன்றி வேறல்ல. உண்மை அனுபவத்தை அடைந்த பிறகு ஒருவன் உலகை அத்விதீய (இரண்டற்ற) பிரம்மமாகவே காண்கிறான் என்பது ஆதிசங்கரரின் வாக்கு. கண் திறந்தாலும் இரவில் இருட்டில் நம்முன் இருப்பவற்றை நம்மால் பார்க்க முடியவில்லை. அதுபோல் நானாவித நாமரூப உலகமாக பிரம்மம் இருந்து கொண்டிருந்தாலும், அதை அஞ்ஞானம் காரணமாக நாம் உணராமல் இருக்கிறோம்.