மாசி மாத பௌர்ணமி கூட்டம் திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் மங்கள இசையுடன் வெள்ளிக்கிழமை தொடங்கியது.அப்பர் இல்ல அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு அறக்கட்டளையின் தலைவர் தலைமை வகித்தார். ஓதுவார் ராஜ்குமார் இறைவணக்கமும், தேவாரப்பாடலும் பாடினார்.