மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26பிப் 2014 11:02
செஞ்சி: மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில் தேர் சுற்றும் பாதையில் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடந்தது. மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில் மாசி தேர் உற்சவம் இம்மாதம் 27ம் தேதி துவங்குகிறது. 28ம் தேதி மயானக் கொள்ளை விழா நடக்கிறது. விழா துவங்குவதை முன்னிட்டு மேல்மலையனூரில் புதிதாக கடைகள் உருவாகி உள்ளன. பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. பக்தர்கள் நெரிசலில் சிக்கி அவதிப்படுவதை தவிர்க்கவும், தேர் பவனியின் போது இடையூறு இல்லாமல் இருக்கவும், நேற்று தேர் சுற்றி வரும் மாட வீதிகளில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடந்தது. இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் பொறுப்பு ஜோதி, செஞ்சி தாசில்தார் ராஜா மேற்பார்வையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் நடந்தது. கோவில் மேலாளர் முனியப்பன், மண்டல துணை தாசில்தார் மெகருனிசா, வருவாய் ஆய்வாளர் தனலட்சுமி உடனிருந்தனர். வளத்தி போலீசார் பாதுகாப்பு பணிகளை செய்தனர்.