பதிவு செய்த நாள்
26
பிப்
2014
11:02
காஞ்சிபுரம் : சிவராத்திரியை ஒட்டி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சிவாலயங்களில், நாளை சிறப்பு பூஜைக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. காஞ்சிபுரம் நகரில், ஏகாம்பரநாதர் கோவில், கச்சபேஸ்வரர், கயிலாசநாதர், வழக்கறுத்தீஸ்வரர், முத்தீஸ்வரர், மணிகண்டீஸ்வரர், அறம் வளத்தீஸ்வரர் உள்ளிட்ட பல்வேறு சிவன் கோவில்கள் உள்ளன. இவற்றில், சிவராத்திரியை முன்னிட்டு, நாளை, சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற உள்ளன. மேலும், கயிலாசநாதர் கோவிலில், நாளை இரவு முழுவதும், சுவாமிக்கு சிறப்பு அர்ச்சனைகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. இதேபோல், திருக்கழுக்குன்றம் வேதிகிரீஸ்வரர், மதுராந்தகம் ஆட்சீஸ்வரர், செங்கல்பட்டு ஏகாம்பரஸ்வரர், பெருநகர் பிரம்மபுரீஸ்வரர் உள்ளிட்ட சிவன் கோவில்களிலும், சிறப்பு உற்சவங்கள் நடைபெறுகின்றன.