பதிவு செய்த நாள்
27
பிப்
2014
11:02
திருப்பதி: திருமலையில், வரும் மார்ச், 12 முதல், வருடாந்திர தெப்போற்சவம் தொடங்குகிறது. ஐந்து நாட்கள் நடைபெறும் இந்த தெப்போற்சவத்தில், முதல், இரண்டு நாட்கள் சீதா, ராம, லட்சுமணர் மற்றும் ருக்மணி சமேத ஸ்ரீகிருஷ்ணரும், பிற, மூன்று நாட்கள், ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமியும் வலம் வர உள்ளனர். இந்த நிகழ்ச்சிக்காக, ஐந்து நாட்களும் வசந்தோற்சவம், ஸஹஸ்ர தீபாலங்கார சேவா ரத்து செய்யப்படுகிறது. ஆண்டுதோறும் நடைபெறும், தெப்போற்சவத்தில், இந்த ஆண்டு, திருக்குளத்தில், புது வகையான அலங்காரங்கள் செய்ய தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.