திண்டுக்கல்: திண்டுக்கல் கோட்டைமாரியம்மன் கோயில் மாசித்திருவிழா இன்று துவங்கி மார்ச் 18 வரை நடக்கிறது. திண்டுக்கல் கோட்டைமாரியம்மன் கோயிலில் மாசி விழா இன்று காலை 10 மணிக்கு பாலாபிஷேகத்துடன் துவங்குகிறது. மாலை 6 மணிக்கு பூத்த மலர் பூ அலங்காரம் நடக்கிறது. நாளை பூத்தேர் நகரில் பவனி வந்து பூச்சொரிதல் விழா நடக்கிறது. மார்ச் 2 ல் சாட்டுதலும், மார்ச் 4 ல் கொடியேற்றமும், மார்ச் 7 ல் நாகல்நகர் புறப்பாடும், 14 ல் பூக்குழியும், அம்மன் தேர் உலாவும், 15 ல் தசாவதாரம், 16 ல் மஞ்சள் நீராட்டுதல், 16 ல் கொடியிறக்கம், 17 ல் ஊஞ்சல் உற்சவமும், மார்ச் 18ல் தெப்ப உற்சவமும் நடக்கிறது. விழாவை முன்னிட்டு தினமும் மண்டகப்படிதார்களின் சார்பில் அம்மன் வீதி உலா மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது.