பதிவு செய்த நாள்
27
பிப்
2014
10:02
காஞ்சிபுரம் : திருப்புட்குழி விஜயராகவப் பெருமாள் கோவிலில், கருடசேவை உற்சவம் நேற்று நடந்தது. காஞ்சிபுரம் அடுத்த, திருப்புட்குழி மரகதவல்லி தாயார், ஸ்ரீ விஜயராகவப் பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இங்கு, மாசி மாத பிரம்மோற்சவம், கடந்த 24ம் தேதி, காலை கொடியேற்றத்துடன் துவங்கி நடந்து வருகிறது. உற்சவத்தின் மூன்றாம் நாளான நேற்று, காலை 6:30 மணிக்கு, விஜயராகவப் பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளி, முக்கிய வீதிகளில் வீதியுலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, சுவாமி தரிசனம் செய்தனர். மேலும், வரும் 2ம் தேதி, திருத்தேர் உற்சவம் மற்றும் மறுநாள் மாலை, பிரபல உற்சவமான குதிரை வாகன உற்சவமும் நடைபெற உள்ளது.