திருப்பரங்குன்றம் கோயில்களில் சிவராத்திரி சிறப்பு வழிபாடுகள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28பிப் 2014 11:02
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் கோயில்களில் சிவராத்திரி, பிரதோஷத்தை முன்னிட்டு, அபிஷேக ஆராதனைகள் நடந்தன.சுப்பிரமணியசுவாமி கோயில் மூலஸ்தான சத்தியகிரீஸ்வரருக்கு மாலை 5.30 முதல் இரவு 12.30 மணி வரை நான்கு கால பூஜைகள் நடந்தன. பிரதோஷத்தை முன்னிட்டு கம்பத்தடி மண்டப நந்திக்கு அபிஷேகங்கள், பூஜைகள் நடந்தன. சன்னதிதெரு சொக்கநாதர் கோயிலில் சிவபெருமானுக்கு, இரண்டு கால பூஜைகள், அபிஷேகங்கள் முடிந்து பிரதோஷ வழிபாடு நடந்தது.மலை மீதுள்ள காசி விஸ்வநாதர், கீழரதவீதி குருநாத சுவாமிக்கு இரண்டு கால அபிஷேகங்கள் பூஜைகள் நடந்தன. மலைக்குப் பின்புறமுள்ள பால் சுனை கண்ட சிவபெருமானுக்கு நேற்று காலை முதல் மார்ச் 1வரை மகா சிவராத்திரி பூஜைகள் நடக்கிறது. நேற்று மாலை பிரதோஷ பூஜைகள் முடிந்து நாகாபரண அலங்காரத்தில் சிவபெருமான் அருள்பாலித்தார்.விளாச்சேரி ஈஸ்வரன் கோயிலில் காசி விஸ்வநாதர் சமேத விசாலாட்சிக்கு ரிக் வேத பாடசால மாணவர்களின் வேதபாராணம் நடந்தது.