சிவம் என்ற சொல்லுக்கு மங்கலம் தருபவர் என்று பொருள். படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்னும் ஐந்து தொழில்களை செய்து உலகத்தைஇயக்குபவராக அவர் விளங்குகிறார். சிவனுக்கு பல வடிவங்கள் உண்டு. அவற்றில், தட்சிணாமூர்த்தி, பிட்சாடனர், பைரவர், நடராஜர், சோமாஸ்கந்த மூர்த்தி ஆகிய வடிவங்கள் சிறப்பானவை. விழாக்காலத்தில் சிவன், சோமாஸ்கந்தராக பவனி வருவது குறிப்பிடத்தக்கது.