கலசப்பாக்கம்: திருவள்ளூர் எலத்தூர் கிராமத்தில் அமைந்துள்ள கேசவ பெருமாள் கோவில் ராஜகோபுர அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு திங்கள்கிழமை அதிகாலையில் விஸ்வரூபம், புண்யாஹவாசம், கும்ப ஆராதனம் ஹோமம், பூர்ணாஹுதி, யாத்ராதானம், கும்பம் புறப்பாடு ஆகியன நடைபெற்றன. தொடர்ந்து காலை 7.15 மணிக்கு ராஜகோபுர விமான அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.