Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கோபுர கலசங்களில் நவதானியங்கள் ஏன்? கோவில் பணியாளருக்கு மனித நேய பயிற்சி
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பாதயாத்திரை பக்தர்களுக்கு தங்கும் மடம் அமைக்க கோரிக்கை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 மார்
2014
10:03

மடத்துக்குளம் : பாத யாத்திரை செல்லும் பக்தர்கள் இளைப்பாற மடத்துக்குளம் பகுதியில் தங்கும் மடம் அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பழநிமலைமுருகன் கோவிலுக்கு பல மாநில பக்தர்கள் வந்து வழிபட்டு செல்கின்றனர். இதில் பலர் பாதயாத்திரையாக வருவது வழக்கம். பல ஊர்களில் இருந்து நடந்து வரும் பக்தர்கள் பழநிக்கு முன்பாக தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மடத்துக்குளம் பகுதியை கடந்து செல்கின்றனர். இந்த பகுதிக்கு வரும் பக்தர்கள் தங்குவதற்கு பொது இடங்கள் இல்லை. இதனால், மரநிழல், ரோடு ஓரங்கள், வீட்டு வாசல்களில் தங்கி இளைப்பாறும் நிலை உள்ளது. இது போல் தங்குவதால் கழிப்பிடத்துக்கும், குளிப்பதற்கும் பல சிரமங்கள் ஏற்படுகின்றன. பலர் அவதிப்படும் நிலையும் உள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகள் அதிக மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். இதற்குத்தீர்வாக முக்கிய இடமாக உள்ள மடத்துக்குளத்தில் பக்தர்கள் தங்கி இளைப்பாற தங்கும் மடம் ஒன்றை அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து பக்தர்கள் கூறுகையில், பலர் உதவி செய்து, பொது தங்கும் மடம் அமைத்தால்  பாதுகாப்பாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும், உடுமலை- கொமரலிங்கம் வழியாக செல்லும் பக்தர்களுக்கு, கொமரலிங்கம் பஸ்ஸ்டாப்புக்கு அருகில் தேவஸ்தானத்தினர் சார்பாக இது போல் மடம் உள்ளது. இதை விட மடத்துக்குளம் வழித்தடத்தை பல மடங்கு பக்தர்கள் பயன்படுத்துகின்றனர். இதனால் மடத்துக்குளம் பகுதியில் ஒரு தங்கும் மடம் அமைக்க வேண்டும் என்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நத்தம்; நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் கோவிலில் கார்த்திகை மாத 3வது சோமவாரத்தை முன்னிட்டு சங்காபிஷேக ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள கோவில்களில், வளர்பிறை ஏகாதசி விழா ... மேலும்
 
temple news
தேனி; வீரபாண்டி கவுமாரியம்மன் கோவிலில் அடுத்தாண்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட உள்ளது. அதற்காக இன்று ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், - கும்பகோணத்தில் உலக பிரசித்தி பெற்ற ஆதிகும்பேஸ்வரர் கோவில் உள்ளது. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்: விருதுநகர் மாவட்டம், சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் மலைப்பகுதியில் மழை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar