பந்தலூர்: தர்மரக்ஷண சமிதி சார்பில், கொளப்பள்ளி மாதேஸ்வரன் கோவில் வளாகத்தில் 1008 சிவநாம அர்ச்சனை வழிபாடு நடந்தது. சிறப்பு பூஜையில் குருசாமி ஆனந்தன் பேசுகையில், "தொன்மை வாய்ந்த இந்து தர்மத்தில் கூறப்பட்டுள்ளதுபோல் உறுதியுடனும், நம்பிக்கையுடனும் மக்கள் இறை பணியாற்ற வேண்டும்; மதமாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளை உணர்ந்து பாவத்தை செய்யாமல் தர்மத்தை செய்ய வேண்டும் என்றார். குருசாமிகள் சுப்ரமணி, ராமையா தலைமை வகித்தனர். கோவிலில் 1008 சிவநாம அர்ச்சனை செய்யப்பட்டு பக்தர்களுக்கு சிவபெருமானின் சுவாமி படம் வீட்டில் பூஜிப்பதற்காக வழங்கப்பட்டது. பூஜையில் கொளப்பள்ளி சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை தர்ம ரஷ்ணசமிதி கூடலூர் மாவட்ட பொறுப்பாளர் கருப்பையா மற்றும் நிர்வாகிகள், கோவில் கமிட்டியினர் செய்திருந்தனர். அத்திக்குன்னா மாரியம்மன் கோவிலில் நடந்த பூஜையில் குருசாமி கருணாநிதி வரவேற்றார். கோவில் கமிட்டி தலைவர் காங்கமுத்து தலைமை வகித்தார். பூஜையில் பங்கேற்றவர்களுக்கு சிறப்பு பூஜை செய்து சுவாமி படம் தரப்பட்டது. ஏற்பாடுகளை நிர்வாகி சுந்தரஜோதி தலைமையிலான குழுவினர் செய்திருந்தனர்.