விழுப்புரம்: விழுப்புரம் பூந்தோட்டம் சின்னப்பா லே அவுட்டில் உள்ள அங்காளம்மன் கோவிலில் 18ம் ஆண்டு மயான கொள்ளை திருவிழா நடந்தது.விழாவையொட்டி, கடந்த 20ம் தேதி காலை கொடியேற்றம் நடந்தது. நேற்று காலை ஹோமம், கலச அபிஷேகம் நடந்தது. பின், மேல்வன்னியர் தெருவில் உள்ள விநாயகர் கோவிலில் இருந்து 108 பால்குட ஊர்வலம் எடுத்து வந்து அங்காளம்மனுக்கு அபிஷேகம், சந்தன அலங்காரம் நடந்தது.மாலை 5 மணிக்கு கோவில் முன் மயான கொள்ளை நிகழ்ச்சி நடந்தது. இரவு 7:00 மணியளவில் விநாயகர், அம்மன்வீர பத்திரர் வீதியுலா நடந்தது.விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் சேகர், ஆனந்தன், காசிநாதன், பழனி ஆனந்தன் செய்திருந்தனர்.