சேலம்: பள்ளப்பட்டி மாரியம்மன் கோவில் மாசித்திருவிழாவில் நேற்று பிரமாண்டமாக அலங்கரிக்கப்பட்ட தேரில் சுவாமி பல்வேறு அலங்காரங்களில் வீதி உலாவந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தேரின் முன் பொய்க்கால் குதிரை ஆட்டம் ஆடிகலைஞர்கள் சென்றனர். சிவன் பார்வதி அலங்காரத்தில் அருள்பாலித்த சுவாமியை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.