நாகர்கோவில் : நாகர்கோவில் பார்வதிபுரத்தை அடுத்துள்ள கள்ளியங்காடு சிவபுரத்தில் பிரசக்தி பெற்ற சிவன் கோவில் உள்ளது. இந்த கோவில் கும்பாபிஷேகம் 4 நாட்கள் நடக்க இருக்கிறது. 10-ம் தேதி அதிகாலையில் விக்னேஷ்வர பூஜை,ரஜாபந்தனம், காலை 9.15 மணிக்கு மகா கும்பாபிஷேகமும், நடைபெறும். பகல் 11 மணிக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. 11-ம் தேதி வருஷாபிஷேகம் நடைபெறுகிறது. அன்று அதிகாலையில் கணபதி ஹோமமும் பின்னர் சிறப்பு அபிஷேகமும் தொடர்ந்து அன்னதானமும் நடைபெறும். விழா ஏற்பாடுகளை திருவாசக சபையினர் செய்து வருகிறார்கள்.