தாராபுரம் தில்லாபுரி அம்மன் கோவிலில் 16 வகை அபிஷேகங்களுடன் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கோவில் பூச்சாட்டு விழா கடந்த மாதம் 18ம்தேதி தொடங்கியது. பின்னர் கோவில் பூட்டப்பட்டு, 15 நாட்களுக்கு பிறகு கடந்த 3ம்தேதி நள்ளிரவு நடை திறக்கப்பட்டு தில்லாபுரி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், விசேஷ அபிஷேகங்கள் நடத்தப்பட்டன. பின்னர் அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.