ஆனைமலை: ஆனைமலை அடுத்துள்ள வாழைக்கொம்பு உச்சி மாகாளியம்மன் கோவிலில் திருக்கல்யாண உற்சவப் பெருவிழா நடந்தது. வாழைக்கொம்பு விநாயகர் மற்றும் வாழைக்கொம்பு அம்மன், உச்சி மாகாளியம்மன் கோவில்களில் கடந்த 21ம் தேதி விநாயகருக்கு பொங்கலிட்டு திருவிழா துவங்கியது. ஒருவார காலமாக தீர்த்தம் கொண்டுவருதல், விநாயகர் கோவிலில் பூ வளர்த்தல், மாவிளக்கு, அம்மன் திருக்கல்யாணம் என இரு கோவில்களிலும் விழா களை கட்டியது. அம்மனின் திருக்கல்யாண விழாவில் உச்சி மாகாளியம்மன், வாழைக்கொம்பு அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.