சுயம்புலிங்கம், சுயம்பு அம்மன் கண்டு தரிசிக்கிறோம். அதுபோல சுயம்பு ஆஞ்சநேயரை கண்டு தரிசிக்க வேண்டுமா? ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் இருந்து 2 கி.மீ. தூரத்தில் உள்ளது அபய ஆஞ்சநேயர் கோயில். இங்குதான் ஆஞ்சநேயர் கடல் மண்ணால் உருவான சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இன்னொரு வியப்பான விஷயம், இவர் வாலறுந்த நிலையில் காட்சி கொடுப்பது. திருப்பூர் பழைய பஸ் நிலையம் அருகே உள்ளது விஸ்வேஸ்வரர் கோயில். அஞ்ஞாதவாசத்தின்போது பாண்டவர்களால் பூஜிக்கப்பட்ட தலம் இது. கங்காதேவி இங்கே சிவனை வணங்கி பேறு பெற்றாள். அவள் தீர்த்தமாக கிணறு வடிவிலும், சிலா ரூபமாகவும் இத்தலத்தில் காட்சி தருவது விசேஷம்.