ஊட்டியில் மகா மாரி, மகா காளி இருவரும் ஒரே கருவறையில் அருள்கின்றனர். இங்குள்ள காட்டேரி அம்மன் சன்னதியில் மந்திரித்துத் தரும் முடிகயிறை அணிந்துகொள்பவர்களுக்கு தோஷங்கள், நோய்கள், பில்லி சூனிய பாதிப்புகள் விலகுகின்றனவாம். நீலகிரி, குன்னூரில் ஒரு மாரியம்மன் கோயில் உள்ளது. ஊரில் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டால் இந்த மாரியிடம் மனமுருக வேண்டிக்கொள்ள விரைவில் பெருமழை பெய்கிறதாம்.