செஞ்சி மலைக்கோட்டைக்குச் செல்லும் வழியில் சிறு குன்றில் ஆஞ்சநேயரின் விஸ்வரூப காட்சியை தரிசிக்கலாம். யாரையோ அறைய கையை ஓங்கியிருப்பது போல் உள்ள இந்த மூர்த்தம் பல்லாண்டுகளாக வழிபடப்பட்டு வருகிறது. சுருண்டு நிற்கும் அவரது வாலில் ஒரு மணி தொங்க விடப்பட்டுள்ளது.