சோழவந்தான்: சோழவந்தான் அருகில் உள்ள மேட்டுநீரேத்தான் என்ற கிராமத்தில் துர்க்கை அம்மன் கோயில் உள்ளது. இங்கு நேற்று இரவு வந்த மர்ம நபர்கள், கதவை உடைத்து, உள்ளே இருந்த 5 கிலோ எடை கொண்ட, துர்க்கையம்மன் சிலையை திருடிச் சென்றுள்ளனர். இது குறித்து சோழவந்தான் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.