காளையார்கோவில்: கொல்லங்குடி வெட்டுடையார் காளியம்மன்கோவில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று முன்தினம் அனுக்கை விக்னேஸ்வரர் பூஜையுடன் துவங்கியது.நேற்று காலை 9 மணிக்கு தங்க கொடிமரத்தில் கொடியேற்றி வைத்து சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்,தீபாராதனை நடைபெற்றது. இரவு 8மணிக்கு அம்மனுக்கு காப்புகட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்று, கேடக வாகனத்தில் திருவீதி உலாவந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 19ம்தேதி காலை 9 மணியிலிருந்து 10 மணிக்குள் தேரோட்டம்,20ம்தேதி தீர்த்தவாரி, மலர் பல்லாக்கு அன்னதானம், விடையாற்றி ஊஞ்சல் உற்சவத்துடன் விழா நிறைவு பெறுகிறது.