பதிவு செய்த நாள்
12
மார்
2014
01:03
கடகம் (புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம்)
செவ்வாய் மட்டும் மாதம் முழுவதும் நற்பலன் வழங்குகிறார். புதன் மார்ச் 28 வரையும், சுக்கிரன் மார்ச் 31க்குப் பிறகும் நற்பலன் அளிப்பர். மற்ற கிரகங்கள் சாதகமற்ற நிலையில் இருப்பதால், எதிலும் கவனமாக செயல்படுவது அவசியம். இருந்தாலும், செவ்வாயின் கருணை உங்களுக்கு இருக்கிறது.மார்ச் 28 வரை, முயற்சியில் வெற்றி கிட்டும். ஆடை, அணிகலன் வாங்குவீர்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். 28க்கு பிறகுவீண் விவாதங்களில் ஈடுபட்டு பொல்லாப்பைச்சந்திக்கலாம்.குடும்பத்தினருக்குத் தேவையான அனைத்து வசதியும் கிடைக்கும்.கணவன், மனைவி இடையே அன்பு, பாசம் தொடரும். உஷ்ணம், தோல் தொடர்பான நோய் ஏற்படலாம். பயணத்தின்போது கவனம் தேவை.தொழில், வியாபாரத்தில் லாபத்திற்கு குறைவிருக்காது. அரசு வகையில் இருந்த பிரச்னைமறையும். பெண்கள் வகையில் தொல்லை வரலாம். சற்று ஒதுங்கி இருக்கவும். ஆனால் மார்ச் 31க்கு பிறகு நிலைமைசீராகும்.கூட்டாளிகளிடையே ஒற்றுமை ஏற்படும். மார்ச் 24,25ல் எதிர்பாராத வகையில் பணவரவுஅமையும். பணியாளர்களுக்குப் பணிச்சுமையும், அலைச்சலும் அதிகரிக்கும். இருந்தாலும், அதிகாரிகளின் ஆதரவுகிடைக்கும். போலீஸ் மற்றும்ராணுவத் துறையினர் நல்ல முன்னேற்றம் காண்பர்.கலைஞர்களுக்கு இருந்து வரும் தேக்க நிலை படிப்படியாக மறையும். மார்ச் 31க்கு பிறகு புதிய ஒப்பந்தம் கிடைக்கும்.பெண்களின் ஆதரவு கிடைக்கும். அரசியல்வாதிகள் கடினமாக உழைக்க வேண்டியதிருக்கும். நல்ல வருமானம்கிடைக்கும்மாணவர்கள் மாத முற்பகுதியில் சிறப்பான பலன் காண்பர். மார்ச் 28க்கு பிறகு முயற்சி தேவை.விவசாயிகளுக்கு இருந்த தொய்வு நிலைதற்போது மாறும். நல்ல மகசூல் கிடைக்கும்.பெண்களுக்கு மகிழ்ச்சி நீடிக்கும். பிள்ளைகள் வகையில் இருந்த பிரச்சினை தீரும். புண்ணிய தலங்களுக்கு சென்றுவரும் வாய்ப்பு கிட்டும்.
நல்ல நாள்: மார்ச் 17,18,24,25,26,27 ஏப்.1,2,3,4,5,8,9,10,13
கவன நாள்: மார்ச் 28,29
அதிர்ஷ்ட எண்: 1,3 நிறம்: சிவப்பு, வெள்ளை
வழிபாடு: வியாழக்கிழமை தெட்சணாமூர்த்தியைவழிபடுங்கள். சனிக்கிழமை சனி பகவானை வழிபட்டு காக்கைக்கு எள் சோறு போடுங்கள்.