பதிவு செய்த நாள்
12
மார்
2014
01:03
மிதுனம் ( மிருகசீரிடம்3,4 திருவாதிரை, புனர்பூசம் 1,2,3)
ராசிநாதனான புதன் மார்ச் 28ல் சாதகமானஇடத்திற்கு வருகிறார். சுக்கிரன் மார்ச் 31ல் இடம் மாறினாலும் நன்மை தொடரும். சூரியன், கேது ஆகியோராலும் நன்மையே. நினைத்த காரியம் நிறைவேறும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பொருளாதார வளம் சிறப்பாக இருக்கும்.குடும்பத்தில் வசதிவாய்ப்பு பெருகும். பெண்கள் மிகவும் ஆதரவுடன் இருப்பர். கணவன், மனைவி இடையே அன்பு பெருகும். மார்ச் 24,25ல் விருந்து விழா என சென்று வருவீர்கள். உடல் நலம்பாதிக்கப்படலாம். மார்ச் 28-ந் தேதிக்கு பிறகு பணவிரயம் உண்டாகாது. உங்கள் மீது இருந்து வரும் அவப்பெயர் நீங்கி, மதிப்பு உயரும். செவ்வாயால் உடல் நலம் பாதிப்பு வரலாம். தொழில்,வியாபாரத்தில் இருந்து வரும் தேக்கநிலை மறையும். லாபம் உயரும். கூட்டாளிகளிடையே ஒற்றுமை ஏற்படும். வாடிக்கையாளர்களின் ஆதரவைக் கண்டு மகிழ்வீர்கள். செவ்வாய் சாதகமற்ற நிலையில்இருப்பதால் சிலருக்கு தீயவர் சேர்க்கை ஏற்படலாம் கவனம்.பணியாளர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு ஆகியவற்றில் எந்த தடையும் இருக்காது. மார்ச் 28க்கு பிறகு சக பெண் ஊழியர்கள் உதவிகரமாக இருப்பர். அதிகாரிகளிடம் வைத்த கோரிக்கை நிறைவேறும். கலைஞர்களுக்கு சிறப்பான நிலை உண்டாகும். புதிய ஒப்பந்தம் கிடைக்கப் பெறுவர். புகழ், பாராட்டு எதிர்பார்த்தபடி இருக்கும். அரசியல்வாதிகள், பொதுநல சேவகர்களுக்கு சிறப்பான முன்னேற்றம் காத்திருக்கிறது. மாணவர்கள் முன்னேற்ற நிலையில் காணப்படுவர். புதன் சாதகமான இடத்திற்கு இருப்பதால் திட்டமிட்டுப் படித்து முன்னேறுவர்.விவசாயிகள் உழைப்புக்கேற்ற வருமானம் பெறுவர். கால்நடை வளர்ப்பில் ஆதாயம் கிடைக்கும். புதிய சொத்து வாங்கும்எண்ணம் நிறைவேறாமல் போகலாம்.பெண்களுக்கு கணவனின் அன்பு கிடைக்கும். குடும்ப வளர்ச்சிக்கு உறுதுணையாக செயல்படுவர். அக்கம் பக்கத்தினர்களின் மத்தியில் செல்வாக்கு உண்டாகும்.
நல்ல நாள்: மார்ச் 15,16,21,22,23,24,25,30,31 ஏப்.1,2,6,7,11,12
கவன நாள்: மார்ச் 26,27 சந்திராஷ்டமம் கவனம்.
அதிர்ஷ்ட எண்: 7,9 நிறம்: செந்தூரம், வெள்ளை
வழிபாடு: ஆஞ்சநேயர் வழிபாடு தைரியத்தை கொடுக்கும். வியாழக்கிழமை தட்சணாமூர்த்தி, செவ்வாயன்று முருகனை வழிபடுங்கள். நாக தேவதையை வணங்குங்கள்.