குபேரன் அசுரன் தான். இருந்தாலும், சிவனருளால், செல்வத்தை அருளும் நவநிதிகளுக்கும் தலைவனாகும் பேறு பெற்றவன். செல்வத்திருமகளான லட்சுமியின்பெயரோடு சேர்த்து லட்சுமி குபேரர் என்றே குறிப்பிடுவர். அதனால், வெங்கடேசப்பெருமாளும் குபேரனிடம் நிதி பெற்று திருமணத்தை நடத்தினார் என்கிறது வெங்கடேச மகாத்மியம்.