விழுப்புரம்: விழுப்புரம் கிழக்கு பாண்டி ரோட்டில் அமைந்துள்ள மகாலட்சுமி குபேரன் கோவிலில் விநாயகர், சக்கரத்தாழ்வார் சுவாமி பிரதிஷ்டை நடந்தது. விழாவையொட்டி நேற்று முன்தினம் இரவு 7:00 மணிக்கு விநாயகர், சக்கரத்தாழ்வார் நூதன பிரதிஷ்டை நடந்தது. நேற்று காலை 6:00 மணிக்கு கோ பூஜை, புண்யாகவகனம், சுதர்சன மூலமந்திரம் நடந்தது.பின்னர் 9:00 மணிக்கு மகா பூர்ணாஹூதி, யாத்ராதானம், கடம் புறப்பாடு, 10:00 மணிக்கு சக்கரத் தாழ்வார் சம்ப்ரோஷணம் நடந்தது. 11:00 மணிக்கு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.